Manitoba, British Columbia மாகாணங்களில் காணாமல் போனதாக தேடப்பட்ட இரண்டு 6 வயது சிறுவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் – மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
வடகிழக்கு Manitoba முதற்குடியினர் பகுதியில் காணாமல் போன ஆறு வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்என RCMP உறுதிப்படுத்தியது.
Johnson Redhead கடந்த புதன்கிழமைக்கு (18) முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார்
Shamattawa முதற்குடியினர் பகுதியில் அவரை தேடும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்தது.
அதேவேளை வடக்கு British Columbia மாகாணத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 6 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இவர் வியாழக்கிழமை (19) மாலை முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாக RCMP ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.