இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கைக்கான கனடிய தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க கடந்த சனிக்கிழமை (21) நடைபெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு இலங்கைக்கான கனடிய தூதரகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
பொருளாதார, அரசியல் சீர்திருத்தத்திற்கான முயற்சிகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக கனடிய தூதரகம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தது.
இதன் மூலம் அர்த்தமுள்ள, நீடித்த தேசிய நல்லிணக்கத்தை அடைய முடியும் என கனடிய தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த வாழ்த்து செய்தியை இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் Eric Walsh தனது x தளத்தில் பகிர்ந்துள்ளார்.