Justin Trudeau அமைச்சரவையில் இருந்து Pablo Rodriguez விலகவுள்ளார்.
நீண்ட கால அமைச்சர் அவர், போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
அமைச்சரவையில் இருந்து விலகும் அவர் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் செயல்படவுள்ளார்.
Quebec Liberal கட்சியின் (PLQ) தலைமைப் பதவிக்கு போட்டியிட உள்ளதாக Pablo Rodriguez விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரான அவர், அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
2015 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரான Pablo Rodriguez, அரசாங்கத்தின் சபை தலைவராகவும், பாரம்பரிய அமைச்சராகவும் பதவி வகித்தவர்