தேசியம்
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆதரவாக வாக்களிக்க Bloc Quebecois தீர்மானம்!

Bloc Quebecois நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் நம்பிக்கை தெரிவித்து அடுத்த வாரம் வாக்களிக்கவுள்ளனர்.

இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வு இப்போது நடைபெறுகிறது.

இதில் பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கிடைக்கும் முதல் வாய்ப்பில் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுக்க Conservative தலைவர் Pierre Poilievre உறுதியளித்தார்.

தனது கட்சி அடுத்த வாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதை Conservative தலைவர் Pierre Poilievre உறுதிப்படுத்தினார்.

“பிரதமர் மீதும் அரசாங்கம் மீதும் சபைக்கு நம்பிக்கை இல்லை” என அந்த பிரேரணை வலியுறுத்தும்

சபை அமர்வில் Conservative எதிர்க்கட்சி நாள் தற்காலிகமாக செவ்வாய்க்கிழமை (24) திட்டமிடப்பட்டுள்ளது.

அன்று Pierre Poilievre வாக்குறுதியளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை Liberal அரசாங்கத்திற்கு எதிராக கொண்டுவரவுள்ளார்.

இந்த மூலம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை (25) நடைபெறும் சந்தர்ப்பம் தோன்றியுள்ளது.

ஆனாலும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து வாக்களிப்பார்கள் என Bloc Quebecois தலைவர் Yves-François Blanchet கூறினார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றுவதற்கு, தற்போதைய 336 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் Liberal அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என வாக்களிக்க வேண்டும்.

தற்போது, Liberal கட்சிக்கு 154 ஆசனங்களும், Conservative கட்சிக்கு 119 ஆசனங்களும் உள்ளன.

இந்த வாரம் நடைபெற்ற இடைத் தேர்தலுக்குப் பின்னர், இப்போது Bloc Québécois 33 தொகுதிகளையும், NDP 25 தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

Related posts

பணவீக்க விகிதம் கடந்த மாதத்தில் குறைந்துள்ளது

Lankathas Pathmanathan

கனடாவின் முக்கிய பங்கு குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

Lankathas Pathmanathan

நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு

Gaya Raja

Leave a Comment