தேசியம்
செய்திகள்

இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்!

Montreal, Winnipeg தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (16) நடைபெறுகிறது.

இந்த இரண்டு தொகுதிகளிலும்  உள்ள கனடியர்கள் தமது அடுத்த நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்கின்றனர்.

இதில் Montreal LaSalle – Émard – Verdun தொகுதியை Liberal கட்சியும்,  Winnipeg Elmwood  – Transcona  தொகுதியை NDP கட்சியும் பிரதிநிதித்துப்படுத்தி வந்தது.

Montreal தொகுதியில் Liberal , Bloc Québécois கட்சிகளுக்கு இடையே போட்டி பலமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Winnipeg தொகுதியை மீண்டும் வெற்றி பெறுவதில் NDP உறுதியாக உள்ளது.

ஆனாலும் இறுதியாக வெளியான கருத்துக் கணிப்புகள் Conservative கட்சிக்கான ஆதரவு அங்கு அதிகம் உள்ளதாக சுட்டிக் காட்டுகிறது.

கோடை கால ஆரம்பத்தில் நடைபெற்ற மற்றொரு இடைத் தேர்தலில் Liberal கட்சியின்  நீண்டகால கோட்டையாக இருந்த St. Paul தொகுதியை Conservative கட்சி வெற்றி பெற்றது.

இது Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்த நிலையில் Montreal இடைத்தேர்தல் Justin Trudeau குறித்தது அல்ல என Liberal  வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தல் பிரதமர் Justin Trudeauவின் தலைமைக்கான வாக்கெடுப்பாக பரவலாகக் கருதப்படுகிறது.

ஆனாலும் வாக்காளர்கள் பிரதமரைத் தாண்டியும் இந்தத் தேர்தலில் தனது வேட்பாளர் திறனை கருத்தில் எடுக்க வேண்டும் என LaSalle – Émard – Verdun தொகுதி Liberal வேட்பாளர் Laura Palestini கோரினார்.

Related posts

Olympics: ஆரம்ப விழாவில் Celine Dion இசை நிகழ்ச்சி

Lankathas Pathmanathan

ராஜபக்ச சகோதரர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

நெடுஞ்சாலை 401 விபத்தில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment