December 12, 2024
தேசியம்
செய்திகள்

Kingston நகரில் இருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம்!

Kingston நகரில் நிகழ்ந்த சம்பவத்தில் இருவர் பலியாகினர் – மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

வீடற்றவருக்கான ஒரு முகாமில் வியாழக்கிழமை (12) நடந்த தாக்குதலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதில் இறந்த இருவர் ஆண்கள் எனவும் காயமடைந்தவர் பெண் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களும் சந்தேக நபர்களும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சந்தேக நபர் வெள்ளிக்கிழமை (13) நீதிமன்றத்தில் முன் நிலைப்படுத்தப்படுவார்  என எதிர்பார்க்கப்படுகிறது.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து Kingston  நகர முதல்வர் Bryan Paterson அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

கனடிய விமான நிலையங்களில் COVID கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

AstraZeneca தடுப்பூசியின் நன்மைகள் அபாயங்களை விட அதிகமானவை – Health கனடா உறுதி

Gaya Raja

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment