தேசியம்
செய்திகள்

NDP முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமற்றது: Doug Ford!

NDP தலைவர் Jagmeet Singh முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமில்லை என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP கடந்த வாரம் அறிவித்தது.

இந்த நிலையில் முன்கூட்டிய தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் Jagmeet Singh முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமற்றது என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் நம்பிக்கை ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டாலும், Liberal சிறுபான்மை அரசாங்கத்திற்கு NDP தொடர்ந்து ஆதரவு வழங்கும் என Doug Ford குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலைத் தூண்டும் வகையில் பல நம்பிக்கை வாக்கெடுப்புகளுக்கு Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில் Liberal அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க நம்பிக்கை வாக்கெடுப்பின் போது Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து சாதகமான கருத்துக்களை Bloc Québécois வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்ய இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

Lankathas Pathmanathan

குடும்பத்தினருடன் Jamaica பயணமானார் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment