தேசியம்
செய்திகள்

Alberta எல்லை முற்றுகை எதிர்ப்பாளர்களுக்கு 6.5 வருட சிறைத் தண்டனை

Coutts எல்லை முற்றுகையில் பங்கேற்றதற்காக 6.5வருட சிறைத் தண்டனையை Alberta எதிர்ப்பாளர்கள் இருவர் பெறுகின்றனர்.

Albertaவின் Coutts என்ற இடத்தில் உள்ள கனடா-அமெரிக்க எல்லை கடவை முற்றுகையிட்டதற்காக இருவருக்கு 6.5ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Anthony Olienick, Chris Carbert ஆகியோருக்கு எதிராக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள காலம் சிறையில் கழிக்க நீதிபதி David Labrenz  உத்தரவிட்டார்.

இவர்கள் இருவரும் February 2022 இல் கைது செய்யப்பட்டதில் இருந்து காவலில் உள்ளனர்.

COVID-19 விதிமுறைகள், தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவர்கள் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர்.

2022 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் இரண்டு வாரங்கள் எல்லைக் கடவையும் போக்குவரத்தை நிறுத்தியிருந்தது.

முற்றுகைக்கு அருகில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், உடல் கவசம் ஆகியவற்றை RCMP கண்டுபிடித்த நிலையில் இவர்கள் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் பதிவாகின.

இந்த முற்றுகையின் போது குற்றம் சாட்டப்பட்ட வேறு இரண்டு எதிர்ப்பாளர்கள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

Christopher Lysakக்கு எதிராக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Jerry Morinக்கு எதிராக 3.5ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Related posts

கனடிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Liberal கட்சியிடம் இருந்து விலகி நிற்க NDP தயார்?

Lankathas Pathmanathan

புதிய கல்வி அமைச்சரானார் Jill Dunlop

Lankathas Pathmanathan

Leave a Comment