தேசியம்
செய்திகள்

Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத் தலைவி மரணம்

Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத் தலைவர் Cathy Merrick மரணமடைந்தார்.

வெள்ளிக்கிழமை (06) Winnipeg நீதிமன்றத்திற்கு வெளியே விழுந்த அவர் மரணமடைந்தார்.

செய்தியாளர்களிடம் உரையாடும் வேளையில் Cathy Merrick மயங்கி விழுந்ததாக தெரியவருகிறது.

மயங்கி விழுந்த அவருக்கு அவசர சிகிச்சை வழங்கிய காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளன வெள்ளி இரவு ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

Cathy Merrick 2022இல் Manitoba மாகாணப் பூர்வகுடி தலைவர்கள் சம்மேளனத்தின் வரலாற்றில் முதல் பெண் தலைவர் ஆனார்.

அவர் கடந்த July மாதம் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் தலைவராக தெரிவானார்

அரசாங்கத்தின் பல மட்டங்களில் பிரதிநிதிகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் Justin Trudeau, முதற்குடி அமைச்சர் கரி ஆனந்தசங்கரி, வடக்கு விவகார அமைச்சர் Dan Vandal, Manitoba முதல்வர் Wab Kinew, Winnipeg நகர முதல்வர் Scott Gillingham உள்ளிட்ட பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

Related posts

Haiti ஜனாதிபதியின் படுகொலை சந்தேக நபர்களில் ஒருவர் கனேடிய தூதரகத்தின் முன்னாள் மெய்க்காப்பாளர்!

Gaya Raja

காட்டுத் தீயால் ஏற்பட்ட சுவாச தொல்லை காரணமாக 9 வயது சிறுவன் மரணம்

Lankathas Pathmanathan

இளம் கனேடியர்களிடையே அதிகரிக்கிறது COVID19 தொற்றுக்களின் பாதிப்பு!

Gaya Raja

Leave a Comment