கனடிய அரசாங்கம் வழங்கும் மன்னர் மூன்றாம் Charles முடிசூட்டு பதக்கத்தை – His Majesty King Charles III Coronation Medal – இரண்டு கனடியத் தமிழர்கள் பெற்றுள்ளனர்.
கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை ஆகிய கனடிய தமிழர்கள் இந்தப் பதக்கத்தை பெற்றனர்.
மொத்தம் 18 கனடியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரத்தில் இவர்கள் இருவரும் அடங்குகின்றனர்.

இந்த முடிசூட்டு பதக்கம் மன்னர் மூனறாம் Charlesசின் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கனடிய அரசின் கௌரவமாகும்.
கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon இந்த அங்கீகாரத்தை ஆரம்பித்து வந்தார்.

கனடாவிற்கும், தமது மாகாணத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களை இந்த அங்கீகாரம் அடையாளப்படுத்துகிறது.