தேசியம்
செய்திகள்

25 KG போதை பொருள் பறிமுதல் – இரண்டு கனடியர்கள் கைது

25 KG போதை பொருள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இரண்டு கனடியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Vancouver சர்வதேச விமான நிலையத்தில் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

இதில் இரண்டு கனடிய பயணிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த மாதம் Vancouver சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களின் போது இந்தப் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக கனடிய எல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மதிப்பு 1.25 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டது.

முதல் சம்பவத்தில், எல்லை அதிகாரிகள் July 27 அன்று 10 KG போதை பொருளை கைப்பற்றினர்.

இரண்டாவது சம்பவத்தில், July 29 அன்று 14.84 KG போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Sydney, Australia செல்லும் பயணிகள் பயணப் பையில் இந்தப் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

Related posts

Quebec காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தி கொலை

Lankathas Pathmanathan

பயங்கரவாத சந்தேக நபரின் கனடிய குடியுரிமையை இரத்து?

Lankathas Pathmanathan

காவல்துறை அதிகாரிக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த துப்பாக்கிதாரி

Lankathas Pathmanathan

Leave a Comment