தேசியம்
செய்திகள்

புதிய கல்வி அமைச்சரானார் Jill Dunlop

Ontarioவின் புதிய கல்வி அமைச்சராக Jill Dunlop நியமிக்கப்பட்டார்.

Ontario மாகாண கல்வி அமைச்சர் Todd Smith உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகிய நிலையில் புதிய கல்வி அமைச்சர் பதவி நியமிக்கப்பட்டார்.

Todd Smith பதவி விலகிய சில மணிநேரங்களுக்கு பின்னர், முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் மாற்றங்களை அறிவித்தார்.

Nolan Quinn புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் அமைச்சராக பதவியேற்றார்.

இந்த அமைச்சு பதவியை Jill Dunlop இதுவரை காலமும் வகித்து வந்தார்.

Simcoe North தொகுதியின் மாகாண சபை உறுப்பினரான 2018 முதல் பதவி வகிக்கும் Jill Dunlop, 2021 ஆம் ஆண்டு முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் அமைச்சராக பதவி வந்தார்.

புதிய இணை அமைச்சராக Kevin Holland, Graham McGregor ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

Related posts

Ontarioவில் 85 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Lankathas Pathmanathan

மேலும் நகர சபைகளுக்கு வலுவான நகர முதல்வர் அதிகாரங்கள்

Lankathas Pathmanathan

Mississauga வாசிகளுக்கு துரோகம் இழைக்கும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan

Leave a Comment