திருடப்பட்ட வாகனத்தால் மோதப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி காயமடைந்தார்.
திருடப்பட்ட வாகனம் குறித்த விசாரணையின் போது ஞாயிற்றுக்கிழமை (11) இந்தச் சம்பவம் North York நகரில் நிகழ்ந்தது.
திருடப்பட்ட வாகனத்தின் சாரதி Toronto காவல்துறை வாகனத்தின் மீது மோதியுள்ளார்.
இதில் காயமடைந்த ஒரு அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதில் காவல்துறை வாகனம் சேதமடைந்தது.
21 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.
இரண்டாவது சந்தேக நபர் தொடர்ந்தும் தேடப்படுகிறார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.