தேசியம்
செய்திகள்

மழை காரணமாக Quebec மாகாணத்தில் அவசர நிலை

Quebec மாகாணத்தின் Chelsea நகராட்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (09) பெய்த கடுமையான மழை காரணமாக Chelsea நகராட்சி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது.

வெள்ளியன்று பெய்த கனமழையால் சில முக்கிய சாலைகள் கடுமையான சேதத்தை எதிர்கொண்டதை அடுத்து, உள்ளூர் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

இந்த அவசர கால நிலை, சேதங்களை மதிப்பிடவும், சாலைகளை போக்குவரத்திற்கு விரைவாக மீட்டெடுக்கவும் பணியாளர்களை அனுமதிக்கும் என நகராட்சி கூறுகிறது.

அவசரநிலை பிரகடனம் குறைந்தது 48 மணி நேரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என நகரத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை Chelsea நகராட்சியில் 83 mm மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Related posts

புதன்கிழமை மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயர்வு

Lankathas Pathmanathan

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து கனடாவும் அமெரிக்காவும் முடிவெடுக்கும் உரிமை உள்ளது ; Kirsten Hillman தெரிவிப்பு

Gaya Raja

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment