December 12, 2024
தேசியம்
செய்திகள்

Greenbelt ஊழலில் Ontario அரசாங்கத்தின் பங்கை விசாரிக்கும் RCMP

Greenbelt ஊழலில் Ontario அரசாங்கத்தின் பங்கை RCMP விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

Ontario முதல்வர் Doug Ford அலுவலகத்தில் தற்போது பணிபுரியும் அல்லது முன்னர் பணிபுரிந்தவர்களை RCMP அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தத் தகவலை Ontario மாகாண அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட Greenbelt நிலங்கள் குறித்த Doug Ford அரசாங்கத்தின் முடிவு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக RCMP இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஆனால் Doug Ford இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது.

Greenbelt ஊழலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என Ontario முதல்வர் Doug Ford தொடர்ந்தும் தெரிவித்து வருகிறார்.

Ontario மக்களுக்கு இது ஒரு சோகமான நாள் என இந்த விசாரணை குறித்து Liberal கட்சியின் தலைவர் Bonnie Crombie கூறினார்.

Related posts

தேர்தல் வெற்றிக்கு Trudeauவை வாழ்த்திய அமெரிக்க அதிபர்!

Gaya Raja

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Toronto வீடு விற்பனையில் சரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment