வெப்பமண்டல புயல் காரணமாக கிழக்கு கனடாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை (09) கிழக்கு கனடாவின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.
இதனால் தெற்கு Ontario, Quebec மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
Ontarioவில் Cornwall முதல் Quebecகில் Quebec City வரை திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
Ottawa கடுமையாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முழுவதும் Ottawaவில் 50 முதல் 75 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
New Brunswick மாகாணத்தில் வெள்ளி இரவு முதல் சனிக்கிழமை (10) காலை வரை 40 மில்லி மீட்டர் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.