இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் கனடியர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை கனடிய அரசாங்கம் விடுத்துள்ளது.
இங்கிலாந்திற்கு பயணிக்கும் கனடிய குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடிய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
தொடரும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்து வரும் வன்முறை மோதல்கள் காரணமாக இந்த பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கூட எந்த நேரத்திலும் வன்முறையாக மாறலாம் என கனடிய அரசாங்கம் எச்சரித்தது.
போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடந்த காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளை கனடிய அரசாங்கம் சுட்டி காட்டியுள்ளது.