தேசியம்
செய்திகள்

Calgary நகரைத் தாக்கிய புயல் – பரவலான சேதம்

Calgary நகரைத் தாக்கிய புயல் வீடுகள், வாகனங்கள், விமான நிலையங்களுக்கு பரவலாக சேதத்தை ஏற்படுத்தியது.

திங்கட்கிழமை (05) Calgary பகுதியில் ஆலங்கட்டி மழை, கனமழை பெய்தது.

இது வீடுகள், வாகனங்கள், Calgary சர்வதேச விமான நிலையத்திற்கு பரவலாக சேதத்தை  ஏற்படுத்தியது.

சுற்றுச்சூழல் கனடா திங்கள் இரவு 8 மணியளவில் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையை வெளியிட்டது.

இதில் இடியுடன் கூடிய மழை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த புயல் Calgary நகரம் முழுவதும் பரவியதால், நகரின் வடக்குப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

விமான நிலையத்தில் ஏற்பட்ட சேதத்தால் பயணிகள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மழையால் ஏற்பட்ட சேதம் காரணமாக அதன் உள்நாட்டு முனைய கட்டடம் மூடப்பட்டதாக திங்களன்று விமான நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

Lankathas Pathmanathan

இந்தியாவிற்கான விமான சேவைகளை விரிவுபடுத்தும் Air Canada!

Lankathas Pathmanathan

West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் சென்றடைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment