2024 Paris Olympics போட்டியில் கனடா ஒரே போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றது
ஆடவருக்கான 100 மீட்டர் butterfly நீச்சல் போட்டியில் கனடியர்கள் வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
Joshua Liendo வெள்ளிப் பதக்கத்தையும், Ilya Kharun வெண்கலப் பதக்கத்தையும் சனிக்கிழமை (03) வென்றனர்.
ஒரே Olympic போட்டியில் இரண்டு கனடியர்கள் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இம்முறை நீச்சல் போட்டியில் கனடா வெற்றி பெறும் ஆறாவது, ஏழாவது பதக்கங்கள் இதுவாகும்.
இதுவரை கனடா மூன்று தங்கம், மூன்று வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் பதின்மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.