September 19, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி?

கனடியப் பொருளாதாரம் May மாதத்தில் 0.2 சதவீதம் வளர்ச்சியடைந்தது.

கனடியப் புள்ளிவிவரத் திணைக்களம் புதன்கிழமை இதனை அறிவித்துள்ளது.

May மாத மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கையை கனடியப் புள்ளிவிவரத் திணைக்களம் புதன் காலை வெளியிட்டது.

May மாதத்தில் பொருளாதாரம் 0.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக கடந்த மாதம் ஒரு ஆரம்ப மதிப்பீடு தெரிவித்தது.

ஆனாலும் எதிர்பார்ப்புக்கு மாறாக பொருளாதாரம் May மாதத்தில் 0.2 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2 சதவீத வருடாந்த வீதத்தில் வளர்ச்சி அடையும் என புள்ளிவிவரத் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

பலவீனமான பொருளாதார நிலைமைகள் காரணமாக, கனடிய வங்கி இந்த மாத ஆரம்பத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வட்டி விகிதங்களை குறைத்தது குறிப்பிட்டத்தக்கது.

Related posts

நெடுஞ்சாலை 401 விபத்தில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

Mississauga-Lakeshore தொகுதியில் மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

New Brunswick கல்வி அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Leave a Comment