கனடிய பெண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி விலக்கப்பட்டார்.
Bev Priestman கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணியின் செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியானது.
அண்மையில் drone பயன்பாடு குறித்த குற்றச்சாட்டு Bev Priestman மீது சுமத்தப்பட்டது.
Paris 2024 Olympic போட்டிகளுக்கு, Bev Priestmaனை இடைநீக்கம் செய்ய கனடிய தேசிய கால்பந்து அணி முடிவு செய்துள்ளது.
எதிர் அணிகளுக்கு எதிராக முந்தைய drone பயன்பாடு குறித்த மேலதிக தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த முடிவை கனடிய தேசிய கால்பந்து அணி எடுத்துள்ளது.
இந்த வாரம், நியூசிலாந்து ஒலிம்பிக் குழு சர்வதேச Olympic குழுவிடம் புகார் ஒன்றை பதிவு செய்தது.
திங்கட்கிழமை (22) நியூசிலாந்து பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியை drone ஒன்று படம் பிடித்ததாக அந்த புகார் அமைந்திருந்தது.
கனடிய கால்பந்து அணியின் ஆய்வாளர் Joseph Lombardi இந்த சம்பவத்தில் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
எட்டு மாத இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனை பெற்ற இவர் கனடிய அணியால் திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த உளவு பார்த்த சம்பவத்தை அறிந்திருந்த கனடிய பெண்கள் அணியின் உதவி பயிற்சியாளர் Jasmine Manderரும் மீண்டும் கனடாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணியின் முதலாவது ஆட்டம் வியாழக்கிழமை (25) நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் கனடிய அணி 2 க்கு 1 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் பங்கேற்காமல் இருக்க Bev Priestman முன்வந்தார்.
கனடிய ஒலிம்பிக் குழு நியூசிலாந்திடம் மன்னிப்பு கோரியுள்ளது.
எஞ்சியுள்ள Paris 2024 Olympic போட்டிகளுக்கு தலைமை பயிற்சியாளர் பதவிக்கு உதவி பயிற்சியாளர் Andy Spence நியமிக்கப்பட்டுள்ளார்.