தேசியம்
செய்திகள்

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் 18 பேர் கைது

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

Peel பிராந்திய காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (23) இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

வீடு, வாகன கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர் கூறினர்.

இவர்கள் Brampton, Mississauga நகரில் இயங்கும் “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புடன்” தொடர்புடையவர்கள் என தெரியவருகிறது.

Project Warlock என பெயரிடப்பட்ட ஆறு மாத விசாரணையின் விபரங்களை காவல்துறையினர் செவ்வாய் காலை அறிவித்தனர்.

இவற்றில் ஆயுதமேந்திய கொள்ளைகள், வாகன திருட்டுகளும் அடங்குகின்றன.

இந்த விசாரணை தொடர்பாக மொத்தம் 150 குற்றச் சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Peel பிராந்திய காவல்துறை தலைவர் நிஷான் துரையப்பா கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் மூவர் 18 வயதுக்கு உட்பட்ட இளம் குற்றவாளிகள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சுமார் 1.2 மில்லியன் டொலர் பெறுமதியான 12 திருடப்பட்ட வாகனங்கள், 4 தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள், 55,000 டொலர் பெறுமதியான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வாளர்கள் பின்வரும் நபர்களை கைது செய்தனர்:

  • 21 வயதான Mississauga நகரை சேர்ந்த Nanayaw Kwarten,
  • 19 வயதான Brampton நகரை சேர்ந்த Mark Obohat,
  • 14 வயதான Mississauga நகரை சேர்ந்த இளைஞன்,
  • 21 வயதான Brampton நகரை சேர்ந்த Jessiah Farrell,
  • 21 வயதான Brampton நகரை சேர்ந்த Kashaun Grenier,
  • 24 வயதான Brampton நகரை சேர்ந்த Tyrese Williams,
  • 19 வயதான Brampton நகரை சேர்ந்த Patrick Kubu,
  • 19 வயதான Brampton நகரை சேர்ந்த Isiah Grenier,
  • 23 வயதான London நகரை சேர்ந்த Mohammed Muheeb,
  • 22 வயதான Brampton நகரை சேர்ந்த Ayub Abdi,
  • 22 வயதான Milton நகரை சேர்ந்த MD Abdul Kibria,
  • 23 வயதான Mississauga நகரை சேர்ந்த Oneil Antubam,
  • 17 வயதான Cambridge நகரை சேர்ந்த இளைஞன்,
  • 26 வயதான Brampton நகரை சேர்ந்த Breanna Nash,
  • 24 வயதான Brampton நகரை சேர்ந்த Teshawn Kerr-Cover,
  • 27 வயதான Brampton நகரை சேர்ந்த Antoine Betty,
  • 26 வயதான Brampton நகரை சேர்ந்த Inderpal Dhillon,
  • 17 வயதான Brampton நகரை சேர்ந்த இளைஞன்.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

அகதி தஞ்சம் கோரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு?

Lankathas Pathmanathan

COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் Opioids காரணமாக நாளாந்தம் எட்டு மரணம்

Lankathas Pathmanathan

உக்ரைன் மழலையர் பாடசாலை மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment