தேசியம்
செய்திகள்

2024இல் மேலும் மூன்று வட்டி விகித குறைப்பு சாத்தியம் ?

இந்த வாரம் கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

மீண்டும் இரண்டு முறை இந்த ஆண்டு, மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது.

மத்திய வங்கி அடுத்த வட்டி விகித அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை (24) வெளியாகிறது.

புதன்கிழமை மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் குறைக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

இதன் மூலம் வட்டி விகிதம் 4.50 சதவீதமாக குறையும்.

பணவீக்கம் தொடர்ந்து குறையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு மேலும் வட்டி விகித குறைப்புகள் பொருளாதார வல்லுநர்களினால் எதிர்வு கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதம் 4 சதவீதமாக குறையும் என பொருளாதார வல்லுநர்கள் சிலர் கணித்துள்ளனர்.

Related posts

நாடளாவிய ரீதியில் 324 காட்டுத்தீ

Lankathas Pathmanathan

தலைமை போட்டி இடை நிறுத்தப்பட்டால், கட்சியை விட்டு வெளியேறுவோம்: பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: பத்தாவது வெண்கலம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment