கனடிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (19) கூடவுள்ளதாக ஊகங்கள் வெளியாகின்றன.
Justin Trudeau தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை அவசரமாக சந்திக்கிறது.
30 நிமிடங்கள் மாத்திரம் இந்தச் சந்திப்பில் நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் “நியமனங்கள்” குறித்து கலந்துரையாட படவுள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் தனது அமைச்சரவையை மாற்றியமைக்க உள்ளதாக ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர் Justin Trudeau ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
அரசியலில் ஈடுபடுவது குறித்து Mark Carneyயுடன் பேசி வருவதை Justin Trudeau அண்மையில் உறுதிப்படுத்தினார்.
நிதி அமைச்சில் Chrystia Freelandடிற்குப் பதிலாக Mark Carneyயை நியமிப்பது குறித்த உரையாடல்கள் நிகழ்வதாக செய்தி வெளியானது.
துணை பிரதமருக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.