February 23, 2025
தேசியம்
செய்திகள்

ISIS போராளியை மணந்த B.C. பெண்ணுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

ISIS போராளியை மணந்த British Colombia பெண்ணுக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

51 வயதான Kimberly Polman பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

2022இல் சிரியாவின் சிறையில் இருந்து அவர் மீண்டும் கனடாவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

Kimberly Polman, 2015 ஆம் ஆண்டு கனடாவை விட்டு வெளியேறி சிரியாவிற்கு ISIS இல் இணைவதற்கு பயணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் இருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இணையத்தில் சந்தித்த ISIS உறுப்பினரான தனது கணவனால் 2015ஆம் ஆண்டு தான் சிரியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக Kimberly Polman கூறுகிறார்.

Related posts

Alberta மாகாண NDP தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தில் கனடிய அரசு?

Lankathas Pathmanathan

Ontarioவில் நோய் வாய்ப்பட்ட காலத்திற்கான விடுப்பு ஊதியத் திட்டம் அறிவிப்பு!

Gaya Raja

Leave a Comment