இங்கிலாந்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்பது கனடாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த நம்பிக்கையை புதுப்பிக்கிறது.
இங்கிலாந்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்று முடிந்த தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது.
புதிதாக அரசமைக்கும் தொழிற்கட்சி கனடாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் என இங்கிலாந்திற்கான கனடிய தூதர் நம்பிக்கை தெரிவித்தார்
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த January மாதம் இங்கிலாந்தால் இடைநிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அரசாங்கத்தின் ஏற்பட்டுள்ள மாற்றம் கனடாவுக்கு சாதகமானது என உயர் ஆணையர் Ralph Goodale கூறினார்
சர்வதேச உறவுகளை மீளமைப்பதற்கு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொழிற்கட்சி உறுதியளித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது
கனடா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் தொழிற்கட்சி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வெளியான கனடிய அரசின் வாழ்த்து செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.