தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்!

கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்தது.

June மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது

இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் வேலையற்றோர் விகிதம் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது .

கனடிய பொருளாதாரம் June மாதத்தில் 1,400 வேலைகளை இழந்துள்ளது.

May மாதம் வேலையற்றோர் விகிதம் 6.2 சதவீதமாக பதிவானது.

2022 January மாதத்தில் 6.5 சதவீதமாக இருந்த பின்னர் வேலையற்றோர் விகிதம் June மாதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

கனடிய மத்திய வங்கி எதிர்வரும் 24ஆம் திகதி, தனது அடுத்த வட்டி விகித முடிவை அறிவிக்க உள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியானது.

April 2023 முதல் வேலையற்றோர் விகிதம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் வேலையற்றோர் விகிதம் 1.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

Related posts

சூடானில் இருந்து கனடியர்களை வெளியேற்றவுள்ள இராணுவத்தினர்?

Lankathas Pathmanathan

இஸ்ரேலின் “சட்டவிரோத பிரசன்னத்தை” நிறுத்த கோரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது கனடா!

Lankathas Pathmanathan

Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்த மற்றொருவர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment