கனடாவின் உளவு அமைப்பின் தலைவர் David Vigneault பதவி விலகுகிறார்.
CSIS எனப்படும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் இயக்குனர் David Vigneault பொது சேவையில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்.
அவர் ஏழு ஆண்டுகள் கனடாவின் உளவு அமைப்பின் தலைமையில் பதவி வகித்தார்.
David Vigneault கனடியர்களுக்கு வழங்கிய சேவைக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc நன்றி தெரிவித்தார்.