தேசியம்
செய்திகள்

Toronto பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் முடிவுக்கு வந்தது

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் 60 நாட்களுக்கு மேலாக அமைந்திருந்த பாலஸ்தீன ஆதரவு முகாங்கள் அகற்றப்பட்டன.

இந்த முகாமை அகற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு Ontario நீதிபதி Markus Koehnen செவ்வாய்க்கிழமை (02) உத்தரவு பிறப்பித்தார்

புதன்கிழமை (03) மாலை 6 மணிக்குள் கூடாரங்களை அகற்றுமாறு நீதிபதி வெளியிட்ட தடையில் போராட்டக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் முகாங்களை அகற்ற விதித்த காலக்கெடுவிற்கு முன்னர், போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுவதாக போராட்ட ஏற்பாட்டுக்காரர்களில் ஒருவர் புதன் மாலை உறுதிப் படுத்தினார்.

May மாதம் 2ஆம் திகதி இந்தப் போராட்டம் ஆரம்பமானது.

இந்தப் போராட்டம் அமைதியான முறையில் முடிந்தது குறித்து Toronto பல்கலைக்கழக தலைவர் Meric Getler மகிழ்ச்சி தெரிவித்தார்.

Related posts

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்

Lankathas Pathmanathan

கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு முதலாவது முதற்குடி நபர் தெரிவு

Lankathas Pathmanathan

மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது கனடா புதிய தடை

Lankathas Pathmanathan

Leave a Comment