தேசியம்
செய்திகள்

B.C. – Alberta எல்லையில் உலங்கு வானூர்தி விபத்து: ஒருவர் பலி – இருவர் காயம்

British Colombia – Alberta எல்லைக்கு அருகே உலங்கு வானூர்தி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் – இருவர் காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை (02) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது என RCMP தெரிவித்தது.

தனியாருக்குச் சொந்தமான உலங்குவானூர்தி இரவு 7 மணியளவில் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

தேடுதல், மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளான உலங்குவானூர்தி கண்டுபிடிக்கப்பட்டது.

உலங்குவானூர்தி விமானி இதில் மரணமடைந்தார்.

பலியான விமானியின் பெயர் வெளியிடப்படவில்லை.

இதில் உயிர் பிழைத்த பயணிகள், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related posts

ரஷ்ய-கனேடியர் ransomware குற்றங்களுக்காக கைது

Lankathas Pathmanathan

சுகாதார ஊழியர்களுக்கு Quebec தடுப்பூசிகளை கட்டாயமாக்கலாம்!

Gaya Raja

பசுமை கட்சியின் தலைமைப் போட்டியில் Elizabeth May

Lankathas Pathmanathan

Leave a Comment