Washingtonனில் அடுத்த வாரம் நடைபெறும் NATO தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் Justin Trudeau கலந்து கொள்கிறார்.
32 NATO நாடுகள் கூட்டணி, 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாட உள்ளது. .
இந்த மாநாட்டில் பிரதமர் Justin Trudeau கலந்து கொள்கிறார்.
உக்ரைன் யுத்தம் இந்த ஆண்டு மீண்டும் இந்த மாநாட்டில் மையப் புள்ளியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா தனது செலவின இலக்குகளை சந்திக்கும் திட்டத்தை முன் வைக்கவில்லை என்ற காரணமாக இந்த மாநாட்டில் நட்பு நாடுகளின் அழுத்தத்தையும் கனடா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.