தேசியம்
செய்திகள்

சுற்றுலாத் தளத்தில் இரண்டு பிள்ளைகளை கைவிட்டுச் சென்ற கனடிய தாய் கைது

Mexico சுற்றுலாத் தளத்தில் தனது பிள்ளைகளை கைவிட்டுச் சென்ற கனடிய தாய் கைது செய்யப்பட்டார்.

கனடியப் பெண் ஒருவர், தனது இரண்டு இளம் பெண் குழந்தைகளை Cancun சுற்றுலாத் தளத்தில் விட்டு சென்றதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மூன்று வயதுக்குட்பட்ட இரு சிறுமிகளையும் தயார், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடத்தில் கைவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க முடியாது என்பதால் சுற்றுலா தளத்தில் கைவிட்டுச் சென்றதாக அந்தப் பெண் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை (26) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட குழந்தைகள் இருவரும் தற்காலிக உதவி இல்லமொன்றில் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழந்தைகளை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வருவதற்கு அவர்களின் கனடிய உறவினர்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதில் கைதான தாயின் வயது, பெயர், ஊர் ஆகிய விபரங்கள் குழந்தைகளின் தனியுரிமை காரணமாக வெளியிடப்படவில்லை.

Related posts

ஈரானிய உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை

Lankathas Pathmanathan

சூரிய கிரகணத்தை பார்வையிட Niagara Falls பயணிக்கும் ஒரு மில்லியன் பேர்

Lankathas Pathmanathan

அரசாங்க துறைகளுக்கான செலவினங்கள் 3 சதவீம் குறைப்பு?

Lankathas Pathmanathan

Leave a Comment