Toronto – St. Paul தொகுதியின் இடைத் தேர்தல் முடிவு நாங்கள் விரும்பிய வகையில் அமையவில்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
Toronto – St. Paul தொகுதி இடைத் தேர்தலில் Conservative கட்சியின் வேட்பாளர் Don Stewart வெற்றி பெற்றார்.
இந்த தேர்தல் முடிவுகள் இரண்டு பிரதான கட்சிகளிலும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தல் முடிவை அடுத்து உடனடியான பொதுத் தேர்தலுக்கான அழைப்பை எதிர்க்கட்சியான Conservative கட்சி விடுத்துள்ளது.
இந்த தேர்தலில் உத்தியோகப்பற்றற்ற முதற்கட்ட முடிவுகளின்படி, Don Stewart 42.1 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
கனடியர்கள் அனைவரும் உணரக்கூடிய உறுதியான, உண்மையான முன்னேற்றத்தை வழங்க எனக்கும் Liberal கட்சிக்கும் தேவை உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவு தெளிவுபடுத்தியதாக பிரதமர் Justin Trudeau ஒப்புக் கொண்டார்.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், அவரது அரசியல் எதிர்காலம் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
Conservative கட்சிக்கும் தலைவர் Pierre Poilievreருக்கும் பெரும் வெற்றியைப் பிரதிபலிக்கும் இந்த இடைத் தேர்தல் தோல்வி Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான சவாலாக அமையும் என கருதப்படுகிறது.
சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் ஆதரவை பிரதமர் தொடர்ந்து பெற்றிருப்பதாக துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland செவ்வாய்க்கிழமை கூறினார்.