Ontarioவில் வாகன கடத்தல்களை விசாரிக்கும் பணிக்குழு, 10 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளது.
ஏழு மாத காலம் தொடர்ந்த விசாரணையின் பின்னர் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டன.
இந்த விசாரணையின் பலனாக 124 கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட 177 வாகனங்கள் மீட்கப்பட்டன
மொத்தம் 749 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாகவும், எட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர்.