தேசியம்
செய்திகள்

வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 2.9 சதவீதமாக அதிகரிப்பு

கனடாவின் வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (25) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டது.

சேவைகளுக்கான விலை அதிகரிப்பால் பணவீக்க அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது.

சேவைகளுக்கான விலைகள் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 4.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கால கட்டத்தில் பொருட்களின் விலை ஒரு சதவீதம் உயர்ந்தது.

கடந்த வருடத்தை விட May மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

April மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை 1.4 சதவீதம் உயர்ந்தது.

April மாதம் வருடாந்த பணவீக்கம் 2.7 சதவீதமாக இருந்தது.

இந்த மாத ஆரம்பத்தில் கனடிய மத்திய வங்கி, அதன் வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

கனேடிய ஆயுதப் படைகளின் நிரந்தர பாதுகாப்புப் படைத் தலைவர் நியமனம்!

Lankathas Pathmanathan

சுயநினைவு இழந்து வாகனத்தை குழந்தை பராமரிப்பு மையத்தில் மோதிய MPP!

Lankathas Pathmanathan

Manitoba மாகாணத்திற்கான இலங்கை தூதர் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment