தேசியம்
செய்திகள்

Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் பேரணி!

Ontario Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

Science Centre மூடப்படக்கூடாது என வலியுறுத்தும் பேரணி ஒன்று சனிக்கிழமை (22) நடைபெற்றது.

Science Centre கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (21) முதல் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Science Centre கட்டிடத்தில் அடையாளம் காணப்பட்ட தீவிரமான கட்டமைப்பு சிக்கல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Doug Ford அரசாங்கம் அறிவித்தது.

ஆனாலும் Science Centre குறித்த அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

Save Ontario’s Science Centre (அல்லது Save  OSC) என்ற அமைப்பு சனிக்கிழமை இந்தப் பேரணியை முன்னெடுத்தது.

அரசாங்கம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து, Science Centreரை மீண்டும் திறக்க தேவையான திருத்த வேலைகளை முன்னெடுக்க முடியும் என இந்த அமைப்பு நம்புகிறது.

இந்தப் பேரணியில் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் Marit Stiles கலந்து கொண்டார்.

Related posts

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு நாட்களில் 6,000க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்!

Gaya Raja

நான்காவது அலை குறித்த புதிய modelling விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும்

Gaya Raja

Leave a Comment