Alberta மாகாண புதிய ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக Naheed Nenshi நியமிக்கப்பட்டார்.
Calgary நகர முன்னாள் முதல்வரான Naheed Nenshi புதிய NDP தலைவராக தெரிவானார்.
முதல் வாக்கெடுப்பில் 86 சதவீத வாக்குகளைப் பெற்று Naheed Nenshi தனது வெற்றியை எளிதாகப் பெற்றார்.
Alberta மாகாண எதிர்க்கட்சித் தலைவராக அவர் தெரிவானார்.
ஆனால் அவர் சட்டமன்றத்தில் உறுப்பினராக பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2010 இல் முதல் முறை Calgary நகர முதல்வராக தெரிவான Naheed Nenshi, தொடர்ந்து மூன்று முறை நகர முதல்வர் பதவி வகித்தார்.
2015 முதல் 2019 வரை Alberta மாகாண முதல்வராக இருந்த முன்னாள் தலைவர் Rachel Notley, தொடர்ந்து இரண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, NDP தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த January மாதம் அறிவித்தார்.