தேசியம்
செய்திகள்

Vaughan இல்லமொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மூவர் காயம்

Vaughan நகரில் இல்லமொன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் – மூவர் காயமடைந்தனர்.

வெள்ளிக்கிழமை (21) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் இருவர் தீவிரமான, ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் மூவரும் காயங்களுடன் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.

இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த நபர்களுக்கும்   அல்லது வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையிலான உறவு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

காவல்துறையினர் குறைந்தது ஒரு சந்தேக நபரை தேடி வருகின்றனர்.

ஆனாலும் சந்தேக நபர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related posts

Torontoவில் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி

Lankathas Pathmanathan

கனடிய  சீக்கிய தலைவர் கொலை குற்றவாளிகள் நால்வர் நீதிமன்றத்தில்

Lankathas Pathmanathan

Manitoba இடைத் தேர்தலில் NDP வெற்றி!

Lankathas Pathmanathan

Leave a Comment