சீனத் தயாரிப்பு மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்குமாறு மத்திய அரசை Ontario மாகாண முதல்வர் வலியுறுத்தினார்.
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விதிக்குமாறு வியாழக்கிழமை (20) வெளியான அறிக்கையில் மத்திய அரசாங்கத்தை Doug Ford வலியுறுத்தியுள்ளார்
அவ்வாறு செய்யத் தவறினால் Ontario மாகாணத்தில் வேலை வாய்ப்புகள் இழக்கப்படும் ஆபத்து உள்ளதாக அவர் எச்சரித்தார்.
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதத்திற்கும் அதிகமான புதிய வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.
ஆனால் அமெரிக்காவின் நடைமுறையை பின்பற்ற கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பதை இதுவரை குறிப்பிடவில்லை.