தேசியம்
செய்திகள்

Toronto துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் அடையாளம் வெளியானது!

Toronto துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர்.

திங்கட்கிழமை (17) மாலை Toronto அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

பலியானவர்கள் 54 வயதான Arash Missagh, 44 வயதான Samira Yousefi என செவ்வாய்க்கிழமை (18) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

பலியானவர்கள் வணிக நிறுவனத்தின் இணை உரிமையாளர்கள் என தெரியவருகிறது.

இதில் சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரி மரணமடைந்த மூன்றாவது நபர் என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

46 வயதான அவரது அடையாளம் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை.

ஆனாலும் துப்பாக்கிதாரி Alan Kats என தெரியவருகிறது.

Don Mills வீதியில் York Mills வீதிக்கும் Lawrence வீதிக்கு இடையில் உள்ள Mallard வீதியில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றில் திங்கட்கிழமை மாலை 3:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.

Related posts

காட்டுத்தீ அடுத்த சில வாரங்களுக்கு தொடரும்?

Lankathas Pathmanathan

கனடாவில் 77 உறுதிப்படுத்தப்பட்ட monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் British Colombia மாகாண முதல்வர்

Gaya Raja

Leave a Comment