Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் துப்பாக்கி தாரியும் அடங்குகின்றார்.
திங்கட்கிழமை (17) மாலை Toronto அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர்.
இதில் ஒரு ஆண், பெண் உட்பட துப்பாக்கி தாரியும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனாலும் மரணமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.
இதில் ஒரு அடமான முகவரும் அடங்குவதாக தெரியவருகிறது.
Don Mills வீதியில் York Mills வீதிக்கும் Lawrence வீதிக்கு இடையில் உள்ள Mallard வீதியில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றில் திங்கள் மாலை 3:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் நிகழ்ந்த அலுவலகத்திற்கு அருகில் ஒரு குழந்தை பராமரிப்பு இல்லம், பாடசாலை ஆகியன அமைந்துள்ளன.
இவை இரண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டன.