தேசியம்
செய்திகள்

குறைவடையும் வீட்டின் விலை?

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் May மாதத்தில் வீடு விற்பனை குறைவடைந்துள்ளது.

கனடிய வீடு விற்பனை சங்கம் இந்த தகவலை வெளியிட்டது.

இதே காலப்பகுதியில்  சராசரி வீட்டின் விலையும் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு May மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 5.9 சதவீதம் குறைந்துள்ளது.

அதேவேளை May மாதத்திற்கான தேசிய சராசரி விற்பனை விலை முந்தைய ஆண்டை விட நான்கு சதவீதம் குறைந்துள்ளது.

2024இல் May மாதத்திற்கான தேசிய சராசரி விற்பனை விலை $699,117 ஆகும்.

May மாதத்தில் Vancouver பெரும்பகுதியில் வீடு விற்பனை ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 19.8 சதவீதம் குறைந்துள்ளது.

Toronto பெரும்பாகத்தில் இதே காலப்பகுதியில் வீடு விற்பனை 22.2 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனாலும் Edmonton நகரில் வீடு விற்பனை 19.7 அதிகரித்துள்ளது.

Related posts

Ontario NDPயின் இடைக்காலத் தலைவரானார் Peter Tabuns

Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!

Gaya Raja

அரசாங்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம் நன்கொடை பெற்ற எதிர்க்கட்சி!

Gaya Raja

Leave a Comment