ரஷ்யாவிற்கு எதிராக கனடிய அரசாங்கம் புதிய தடைகளை அறிவித்தது.
ரஷ்யாவின் இராணுவ, தொழில் துறைகளை குறிவைக்கும் வகையில் இந்த புதிய பொருளாதார தடைகள் அமைகின்றன
இந்த புதிய பொருளாதாரத் தடை அறிவித்தல் ரஷ்யாவின் சட்டவிரோதப் போரை சீர்குலைக்கும் கனடாவின் நீண்டகால முயற்சிகளை பிரதிபலிக்கிறது என கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்
இத்தாலியில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த தடை அறிவித்தல் வெளியானது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு G7 உச்சி மாநாட்டில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக உள்ளது.
கனடிய அரசாங்கத்தின் தடைகள் 27 புதிய தனி நபர்களையும் நிறுவனங்களையும் குறிவைக்கின்றன,
ரஷ்ய இராணுவத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நிறுவனங்களும் தடை பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
அதேவேளை ரஷ்யா அதன் அண்டை நாடான மால்டோவாவில் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த முயல்வதாகவும் கனடா குற்றம் சாட்டுகிறது.