சில ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இந்த கோடையில் கனடியர்களுக்கு பயண எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது.
கனடிய அரசாங்கம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு, பிற பிராந்தியங்களுக்கான பயண ஆலோசனைகள் அல்லது எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது.
குறிப்பாக 2024 ஆம் ஆண்டு Paris Olympic போட்டிகளின் போது France ஒரு பயங்கரவாத இலக்காக இருக்கலாம் என கனடிய அரசாங்கம் கூறுகிறது.
கனடியர்கள் Franceசில் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனடாவின் பயண ஆலோசனை கூறுகிறது.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பயண எச்சரிக்கைகள் கொண்ட பிரபலமான இடங்களாக France, Italy, Belgium, Denmark, Germany, Spain, Sweden, United Kingdom Netherlands ஆகியன கனடிய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டன.
தவிரவும், கனடியப் பயணிகள் Bahamasசில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகின்றன.