Ontario அமைச்சரவை மாற்றத்தை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்கின்றன.
Ontario முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை வியாழக்கிழமை (06) அறிவித்தார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் புதிய கல்வி அமைச்சராக Todd Smith நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாற்றத்தை மாற்றத்தை மாகாண முக்கிய ஆசிரியர் சங்கங்கள் வரவேற்கின்றன.
இந்த மாற்றம் Doug Ford அரசாங்கத்துடன் ஒரு புதிய முன்னோக்கிய பாதையை வழிவகுக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
Stephen Lecce, 2019ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சராக செயல்பட்டார்.