கனடிய தமிழர் பேரவையை சீர்திருத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையின் விவரங்களை வெளியிட எதிர்வரும் 18 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற மெய்நிகர் சமூகக் கூட்டத்தில் கனேடிய தமிழர் கூட்டு இந்த தகவலை வெளியிட்டது.
கடந்த May மாதம் 14ஆம் திகதி பேரவைக்கு இந்த காலக்கெடுவை முன்வைத்து முறையான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூட்டின் சார்பில் சட்டத்தரணி அபிமன்யு சிங்கம் தெரிவித்தார்.
தமது செயற்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து சமூகத்திற்கு விளக்கமளிக்கும் மெய்நிகர் சமூகக் கூட்டம் ஒன்றை கனேடியத் தமிழர் கூட்டு நடாத்தியது.
இந்தக் கூட்டத்தில் இமாலயப் பிரகடனம், தமிழ் இனப்படுகொலை கோட்பாடு, உலகத் தமிழர் பேரவையில் இருந்து விலகல், அமைப்புசார் மறுசீரமைப்பு, தெருவிழா முன்னெடுப்பு ஆகியன தொடர்பான பேரவையின் நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பொதுமக்கள், ஊடகத்தினர், சமூகக் கரிசனையாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த மெய்நிகர் சமூகக் கூட்டத்தில் கேள்வி-பதில் பகுதியும் நிகழ்ந்தது.