கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது.
May மாதம் வேலையற்றோர் விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் 27 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது.
கனடிய மத்திய வங்கி, நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்த இரண்டு நாட்களின் பின்னர் இந்த அறிவித்தல் வெள்ளிக்கிழமை (07) வெளியாகிறது.
கனடிய தொழில் சந்தை தொடர்ந்து பலவீனமடைந்து வருவதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் தொழிலாளர் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அதிக வட்டி விகிதங்கள் இதற்கு முதன்மை காரணியாக நோக்கப்படுகிறது.
April மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.