தேசியம்
செய்திகள்

Pharmacare சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

Pharmacare சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Liberal அரசாங்கத்தின் Pharmacare சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது வாசிப்பின் பின்னர்  நிறைவேற்றப்பட்டது.

முன்கூட்டிய தேர்தலைத் தடுப்பதற்கான Liberal – NDP அரசியல் உடன்படிக்கையின் முக்கிய அங்கமாக இந்த சட்ட மூலம் அமைகிறது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மூலம் Senate சபைக்கு செல்கிறது.

இதற்கு  ஐந்து ஆண்டுகளில் 1.5 பில்லியன் டொலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில கருத்தடை, நீரிழிவு மருந்துகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்துவதை இந்த சட்டமூலம் உறுதிப்படுத்துகிறது.

இதில் என்ன மருந்துகள் உள்ளடக்கப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அது குறித்து மாகாண, பிராந்திய அரசாங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

இந்த சட்டமூலம் Senate சபையின் அங்கீகாரம் பெற்றதும், சுகாதார அமைச்சர் Mark Holland மாகாணங்கள், பிராந்தியங்களுடன் முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பார்.

Related posts

கனடாவில் 94 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு!

Gaya Raja

Toronto பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருக்கு Nobel பரிசு

Lankathas Pathmanathan

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja

Leave a Comment