Ontario மாகாணத்தின் Rexdale நகரில் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார் – நால்வர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதில் காயமடைந்த ஐவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக Toronto காவல்துறையினர் திங்கட்கிழமை (03) உறுதிப்படுத்தியுள்ளனர்.
North Albion உயர்நிலைப் பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்தது.
காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.
North Albion உயர்நிலைப் பாடசாலை, அதனுடன் இயங்கிய குழந்தை பராமரிப்பு நிலையம் ஆகியன திங்களன்று மூடப்பட்டிருக்கும் என Toronto மாவட்ட பாடசாலை வாரியம் உறுதிப்படுத்தியது.