தேசியம்
செய்திகள்

கொலையாளி Robert Pickton மரணம்

தொடர் கொலையாளி Robert Pickton தனது 74 வது வயதில் மரணமடைந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

British Colombia மாகாணத்தின் தொடர் கொலையாளியான இவர் வெள்ளிக்கிழமை (31) மரணமடைந்தார்.

இவர் சிறையில் தாக்கப்பட்டு 12 நாட்களுக்குப் பின்னர் மரணமடைந்துள்ளார்.

Robert Pickton, Quebec Port-Cartier சிறையில் May மாதம் 19ஆம் திகதி கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளான நிலையில் அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அவரது மரணம் குறித்து உறவினருக்கு அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரை தாக்கிய 51 வயதான சந்தேக நபர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

Related posts

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

புதிய வீடு கட்டுமான முயற்சிகளுக்கு $600 மில்லியன் நிதி?

Lankathas Pathmanathan

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja

Leave a Comment